குடியேறிகளுக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் மீது தாக்குதல் – சந்தேகநபர்களுக்கு வலைவீச்சு

பிரிட்டனின் டோவர் Dover மற்றும் போர்ட்ஸ்மவுத்தில் Portsmouth புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை தேடி வருகின்றனர் என காவல்துறை அறவித்துள்ளது.

குற்றவாளிகள் “சட்டத்தின் முழு பலத்தையும் எதிர்கொள்வார்கள்” என்று அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

கொமன்ஸில் பேசிய காவல்துறை அமைச்சர் சாரா ஜோன்ஸ் Sarah Jones, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், “பொதுப் பாதுகாப்பைப் பேணுவதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்” அதிகாரிகளுக்கு அரசாங்கத்தின் முழு ஆதரவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியேறிகளுக்கு எதிராக தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், வாகனங்களும் சேதமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles