2030 இற்குள் செயற்கை நுண்ணறிவால் மனிதகுலம் அழியும்! ஆந்த்ரோபிக் வல்லுநர் எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உருவாக்கி வரும் ‘சூப்பர் இன்டெலிஜென்ஸால்’ 2030இற்குள் மனிதகுலமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து விலகிய வல்லுநர் ஜேக்கப் காக்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்திலிருந்து ராஜிநாமா செய்துள்ள வல்லுநர் ஜேக்கப் காக்ஸன், செய்யறிவு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு உருவாக்கி வரும் ‘சூப்பர்இன்டெலிஜென்ஸ்’ குறித்து எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“நான் ஆந்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து இன்று ராஜிநாமா செய்துள்ளேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஓப்பன் ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் ஆராய்ச்சியாளராக பணியாற்றியுள்ளேன். இந்த இரண்டு நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்படவில்லை. அவர்கள் மனித கட்டுப்பாட்டைத் தாண்டி, தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ளும் ‘சூப்பர்இன்டெலிஜென்ஸ்’ நோக்கி பயணித்து, நமது உயிர்களுடன் விளையாடுகிறார்கள்.

செய்யறிவை உருவாக்கும் ஆராய்ச்சியாளர்கள், அது 2030 இற்குள் நம் அனைவரையும் அழித்துவிடும் என்று நம்புகிறார்கள். இது ஒரு சந்தைப்படுத்தல் தந்திரம் அல்ல. சொல்லப்போனால், பல ஏஐ நிறுவன நிர்வாகிகளும் மூத்த ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகைகளில் பேசும்போது, தங்கள் வார்த்தைகளை அறிவுப்பூர்வமாக தோன்றும் வகையில் பேசுவார்கள். ஆனால் அதே நபர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் பயத்தை வெளிப்படுத்துவதை நான் கேட்கிறேன்.

ஓப்பன் ஏஐ, மனித நாகரிகத்திற்கு ஏற்படக்கூடிய அபாயங்களை ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. ஆந்த்ரோபிக்கில் அபாயங்களை நன்கு புரிந்து கொண்டாலும், முதலில் அதை அடைவதற்கான பந்தயத்தில் சிக்கியுள்ளனர்.

அடுத்த சில ஆண்டுகள் உண்மையில் எப்படி இருக்கும் என்பதைப் பரிசீலிக்குமாறு ஏஐ ஆராய்ச்சியாளர்களை கேட்டுக்கொள்கிறேன். முழுமையான புரிதல் இல்லாமல் சூப்பர்இன்டெலிஜென்ஸ் சோதனையைத் தொடங்க விரும்புகிறீர்களா? இது எப்படியும் நடக்கத்தான் போகிறது என்று தலைகுனியப் போகிறீர்களா? அல்லது இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மாறுபட்ட நிபந்தனைகளுக்கு அழைப்பு விடுக்கப் போகிறீர்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles