உக்ரைன் மீது நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரஷ்யா தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒடெசா பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் (Dnipropetrovsk), டொனெட்ஸ்க் (Donetsk), ஜபோரிஜியா (Zaporizhzhia), கீவ் (Kyiv), சுமி (Sumy), கார்கிவ் (Kharkiv) மற்றும் கெர்சன் (Kherson) ஆகிய பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த தாக்குதல்களுக்காக ரஷ்யா பல்வேறு வகையான 129 டிரோன்களையும், அத்துடன் இஸ்காண்டர்-எம்/கேஎன்-23 (Iskander-M/KN-23) பாலிஸ்டிக் ஏவுகணைகள், எட்டு கலிப்ர் (Kalibr) குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆறு வழிகாட்டப்பட்ட Kh-59/69 ஏவுகணைகளையும் பயன்படுத்தியதாக உக்ரைன் விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் உக்ரைன் 110 வான்வழி இலக்குகளை அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆறு கலிப்ர் ஏவுகணைகள், இரண்டு Kh-59/69 ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஏவப்பட்ட ஒரு S-8000 பண்டரோல் (Banderol) குரூஸ் ஏவுகணை மற்றும் 101 ஆளில்லா வான்வழி டிரோன்கள் இவ்வாறு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
