எல்லை பிரச்சினையை தீர்ப்பதில் இணைந்து செயல்பட சீனா – இந்தியா இணக்கம்

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருநாட்டு எல்லை பிரச்சினைகளை தீர்ப்பதில் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளனர் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீன ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே ஒருமித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

“எல்லை தொடர்பான பிரச்சினைகளில் இரு தரப்பினரும் தற்போதுள்ள ஒப்பந்தங்களையும் புரிந்துணர்வுகளையும் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை” மோடி வலியுறுத்தினார் என்றும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளும் பல விஷயங்களில் வேறுபட்டிருந்தாலும், ஒன்றின் பலத்தை மற்றொன்று பூர்த்தி செய்யவும், ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கவும், பரஸ்பர வெற்றியை அடையவும், ஒன்றாக முன்னேறவும் முழுத் தகுதி பெற்றுள்ளன,” என்று டெல்லியில் இருந்து வெளியிடப்பட்டுள்ள காணொளியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles