ஜி20 உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான போராக உக்ரைன் – ரஷ்ய போர் மாறியுள்ளது.
இதற்கு தீர்வுக்கான இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், இழுபறி நிலை நீடிக்கிறது.
இது தொடர்பாக, அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சமீபத்தில் கீவ் மற்றும் மொஸ்கோவிற்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும், இந்த வாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் புடின் ஆகியோர் தொலைபேசி வாயிலாக இந்த மோதல் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ஜி20 உச்சிமாநாட்டில் உக்ரைன் – ரஷ்ய தலைவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி20 முக்கியப் பொருளாதார நாடுகளின் 2026ஆம் ஆண்டுக்கான தலைமைப் பதவியை அமெரிக்கா வகிக்கிறது. மியாமியில் டிசம்பர் மாதம் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
