பிரிக்ஸ் மாநாடு இன்று ஆரம்பம்: கவனத்தை ஈர்த்த ‘தாமரை’

பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்​டபத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

மாநாட்டை ஒட்டி டெல்லி பாரத் மண்டபத்தில் வைக்​கப்​பட்​டிருக்​கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் “நமஸ்தே தாமரை” சின்​னம் அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்து வரு​கிறது.

இந்​தி​யா​வின் தேசிய சின்​ன​மான தாமரை மலரே, பிரிக்ஸ் உச்சி மாநாட்​டின் சின்​ன​மாக​வும் மாறி​யிருக்​கிறது. இதன் நடு​வில் “நமஸ்​தே” (வணக்​கம்) வடிவம் பொறிக்​கப்​பட்டு இருக்​கிறது.

உற்சாக வரவேற்​பு, மதிப்​பு-மரி​யாதை, விருந்​தோம்​பல், ஒன்றிணைந்து செயல்​படு​வது ஆகிய​வற்றை பிரிக்ஸ் மாநாட்டு சின்​னம் பிர​திபலிக்​கிறது.

தாமரை​யின் ஒவ்​வொரு இதழுக்​கும் தனித்​தனி வண்​ணம் தீட்​டப்​பட்டு உள்​ளது. இதன்​படி பிரிக்ஸ் கூட்டமைப்​பின் அடிப்​படை உறுப்பு நாடு​களான பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்​ஆப்​பிரிக்கா ஆகிய​வற்​றின் தேசிய கொடிகளின் வண்​ணங்​கள் சின்​னத்​தில் இடம்​பெற்​றுள்​ளன

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles