கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் 13 வயது சிறுவன் மரணம் – மட்டக்களப்பில் சோகம்!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியிலுள்ள கோயிலொன்றில் நடைபெற்ற விழாவின்போது பட்டாசு வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், நேற்று (11) இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

இரவு சுமார் 11 மணியளவில், குறித்த பட்டாசு கொளுத்தப்பட்ட நிலையில் வெடிக்காமல் இருந்ததால் அதனை அகற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனை பார்வையிடுவதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, பட்டாசு திடீரென வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles