வெனிசுலாவுக்கான புதிய தூதுவரை நியமித்தது பிரித்தானியா

வெனிசுலாவுடனான தனது இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தி , அந்நாட்டிற்கான புதிய தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக பிரித்தானியா இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.

வெனிசுலாவில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்த ஆதரவளிக்கும் தனது பங்கை வலுப்படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லண்டன் தெரிவித்துள்ளது.

“இத் தீர்மானமானது பரந்த சர்வதேச உறவுகளை மீண்டும் புதுப்பிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்” என பிரித்தானியா அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்நடவடிக்கையானது சர்ச்சைக்குரிய வெனிசுலாவின் 2024 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கோ அல்லது அங்குள்ள அரசியல் பிரிவுகளுக்கோ ஆதரவளிப்பதாக அமையாது என்றும்,

வெனிசுலா அரசுடன் தொடர்ச்சியான உறவைப் பேணும் பிரித்தானியாவின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையையே இது பிரதிபலிக்கிறது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவினால் நிகோலஸ் மதுரோ பதவியிலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸின் (Delcy Rodriguez) தலைமையிலான அரசாங்கமே தற்போது வெனிசுலாவில் அதிகாரத்தில் உள்ளது.

பிரித்தானியாவின் இத் தீர்மானத்தை வெனிசுலா அரசாங்கம் வரவேற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles