ஈரான் தூதரை வெளியேற்றியது சுவீடன்!

சுவீடன் அரசு அந்நாட்டுக்கான ஈரானின் தூதரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலையில், தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள தூதரகத்தில் இருந்து ஈரானிய தூதரை நேரில் அழைத்து அவரை நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தியதாக, சுவீடனின் வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கைக்கு முரணான செயல்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றிய முழுமையான விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இத்துடன், சுவீடனில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் ஈரானின் நடவடிக்கைகள் இருப்பதாக, சுவீடனின் சட்ட அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் கூறியுள்ளார்.

சுவீடனில் உள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்ள உள்நாட்டைச் சேர்ந்த குற்றவாளிக் குழுக்களை ஈரான் பணியமர்த்தியதாக, சுவீடனின் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஈரான் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles