ஈரானில் பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களின்போது அமெரிக்க படைகள் போர் குற்றம் இழைத்ததாக ஐ.நாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு தாக்குதல்களிலும் சுமார் 120 குழந்தைகள் உயிரிழந்தன என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் போர்க்குற்றங்களை இழைத்திருக்கக்கூடும் என்று ஐ.நா.வின் உண்மை கண்டறியும் குழு ஒன்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
லாமெர்ட் (Lamerd) நகரில் உள்ள விளையாட்டு மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது அமெரிக்கத் தாக்குதல் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டதாக ஐ.நா. அறிக்கை கண்டறிந்துள்ளது.
இருப்பினும், அந்நகரில் தாக்குதல்கள் எதையும் நடத்தவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் (U.S. Central Command) மறுத்துள்ளது.
இந்த கண்டறிதல் பற்றிய அறிக்கை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
