அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் என்பவரின் தண்டனையை இரத்துச் செய்வதற்கும், அவருக்குச் சட்டரீதியான மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு அவர் இவ் அவசரக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட மேன்முறையீட்டின் தீர்ப்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அனோஜனின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கும், தண்டனையை இரத்து அல்லது குறைப்பதற்கும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் அவசரமான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles