தென்மராட்சி விபத்தில் ஓய்வுநிலை ஆசிரியர் பரிதாப உயிரிழப்பு!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெற்பேலி – கிளாலி வீதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் 65 வயதான ஓய்வுநிலை ஆசிரியர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கட்டடப் பொருள்களை ஏற்றிச் சென்ற மகேந்திரா ரக வாகனம், ஓய்வுபெற்ற ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் உசன் பகுதியைச் சேர்ந்த 65 வயதான சி.சிவகரன் என்ற ஓய்வுநிலை ஆசிரியரே உயிரிழந்துள்ளார்

அவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles