யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டது.
மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இருப்பினும், தடையை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்ற நிலையில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 1.00 மணி வரையில் கட்டம் கட்டமாக மின் விநியோகம் சீராகி, மதியம் 1.30 மணிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் சீரானது.
மின் தடைக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
