அமெரிக்காவுக்கு அனுப்பட்ட விமானத்தின் பாகங்களை இரகசியமாக கைப்பற்றிய சீனா

ஹொங்கொங்கிற்கு கொண்டுவரப்பட்ட F-35 ஸ்டெல்த் விமானத்தின் பாகங்களை சீன அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விமானத்தின் பாகங்கள் கடந்த மே மாதத்தின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் விளக்க முடியாத காரணத்தினால் அதன் பாகங்கள் ஹொங்கொங்கிற்கு மாற்றப்பட்டன.

இதன்போதே சீன அரசாங்கம் இதனை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

கைப்பற்ற பொருட்களில் ஆஸ்திரேலிய இராணுவத்தின் F-35 விமானத்தின் காக்பிட் மேற்கூரை மற்றும் ஆயுதப் பகுதி கதவு ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா செல்லும் வழியில் அந்த விமானம் தென் கொரியாவில் நின்றது என்றும், அங்கிருந்து ஹொங்கொங்கிற்குத் திருப்பி விடப்பட்டது என்றும் இத்தகவல் அறிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விமானம் ஏன் தென் கொரியாவில் நின்றது, ஏன் ஹொங்காங்கிற்குத் திருப்பி விடப்பட்டது அல்லது அந்த உதிரிபாகங்கள் வேண்டுமென்றே திருப்பி விடப்பட்டனவா அல்லது தவறுதலாக அவ்வாறு நடந்ததா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles