கனடாவிலிருந்து இலங்கை செல்லவிருந்த பயணி போதைப் பொருளுடன் கைது!

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லவிருந்த பயணி ஒருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இலங்கைக்கு கொண்டு செல்லப்படவிருந்த சட்டவிரோத போதைப்பொருட்கள் அடங்கிய பயணப்பைகளை கனடா எல்லை சேவைகள் முகவரக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, பொதிசெய்யப்பட்ட ஹஷிஷ் மற்றும் கொக்கைன் ஆகிய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கனடா எல்லை சேவைகள் முகவரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கைகளின்போது உளவுத்துறை தகவல்கள், அதிநவீன கண்டறிதல் கருவிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles