மீண்டும் ஆரம்பமாகவுள்ள திருச்சி – யாழ்ப்பாணம் விமான சேவை

திருச்சி – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு நகரங்களுக்கும் இடையிலான விமானங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படவுள்ளன.

திருச்சியில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 1.50 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும்
விமானம், பிற்பகல் 3.25 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த விமான சேவை, சுமார் 7 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles