பிரிட்டனிலுள்ள அமெ.படைத்தளம் குறிவைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை – ஈரான் மறுப்பு

பிரித்தானியாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் விமான தளம் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கும், தமது நாட்டுக்கும் தொடர்பு இல்லை என லண்டனிலுள்ள ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்துத் தெரிவிக்கையில், “சந்தேகநபர்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தவே திட்டமிட்டிருந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் குறித்துப் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) –

“ஈரானும் அதன் ஆதரவு அமைப்புகளும் நமக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவதை நாம் அறிவோம். எமது ஜனநாயகத்தை வெறுக்கும் அவர்கள், எமது நலன்களுக்கும் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் அவற்றை நாம் முறியடித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியா தனது தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தை ‘கடுமையானது’ (Severe) என உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரித்தானியாவிலுள்ள அமெரிக்க மையங்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிக்கக் கூடும் என்பதால், அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles