இஸ்ரேல் செல்லும் விமானங்களை இயக்கிய 12 ஓமன் பைலட்கள்: பாதுகாப்பு குறைபாடு என குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் பயணிகள் விமானங்களை குறிவைத்து பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு இஸ்ரேல் விமான நிறுவனங்கள் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றுகின்றன.

இஸ்ரேலின் பயணிகள் விமானங்களில் காக்பிட் (விமானிகள் அறை) கதவுகள் மிகவும் வலுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக பயணிகள் விமானத்தில் ஒரு காக்பிட் கதவு மட்டுமே இருக்கும். ஆனால் இஸ்ரேல் விமானங்களில் இரு காக்பிட் கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் அனைத்து பயணிகள் விமானங்களிலும் ஏவுகணை தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதன்மூலம் நடுவானில் விமானங்களை குறிவைத்து நடத்தப்படும் ஏவுகணை தாக்குதல்களை தடுக்க முடியும். ஒவ்வொரு விமானத்திலும் சாதாரண உடையில் பாதுகாப்புப் படை வீரர்களும் பயணம் செய்கின்றனர்.

இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்திருக்கும் நாடுகளின் பைலட்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். பைலட்டின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் “ஃபிளை துபாய்” உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த அறிவுரையை முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடையே தூதரக உறவு கிடையாது. இதன்படி ஓமன் நாட்டு பைலட்கள் இஸ்ரேல் செல்லும் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 12-க்கும் மேற்பட்ட ஓமன் பைலட்கள் இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்கி உள்ளனர் என்று இஸ்ரேல் ஊடகங்கள் குற்றம் சாட்டி உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles