ஞானசார தேரருக்கு மீண்டும் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்குப் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்றையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.

கைதுசெய்யப்படுவதற்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று மேன்றையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியைச் சிறையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

முன்னர் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்பின் அடிப்படையில் ஞானசார தேரர் விடுவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles