இளம் பெண்ணைக் குத்திக் கொலை செய்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இளைஞர், அங்கிருந்த இளம் பெண் மீது சரமாரியாகக் கத்திக் குத்துத் தாக்குதலை நடத்தியுள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாக்குதலைத் தடுக்கச் சென்ற அந்தப் பெண்ணின் தாயார் மீதும் அதே இளைஞர் கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட தாயார், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து கத்தியுடன் அங்கிருந்து தப்பிய அந்த இளைஞர், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுத் தபால் ரயில் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles