நாமல் ராஜபக்சவின் மறியல் நீடிப்பு!

கிரீஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரீஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த கருத்துக்களைப் பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகமை இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அத்துடன், சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை மீதான நீதிமன்றத்தின் கட்டளை அன்றைய தினம் (16 ஆம் திகதி) அறிவிக்கப்படும் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles