19 வயது மாணவி மரணம் – காதலன் கைது!

மலேசியாவின் குவாந்தான், Jalan Air Putihவில் உள்ள வீடொன்றில் 19 வயது மாணவி இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அச்சம்பவம் தொடர்பாக அவரது 19 வயது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சந்தேக நபர் தமக்கும் காதலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறி அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் அளித்தார் என குவாந்தான் மாவட்டக் காவல் துறை உதவி ஆணையர் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், வீட்டின் தரைத்தளத்தில் இருந்த அறையில் அம்மாணவி சுயநினைவின்றி படுக்கையில் கிடந்ததைக் கண்டனர். தடயவியல் பரிசோதனையில் அவரது கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அம்மாணவியின் காதலர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை தொடரப்படும் நிலையில், சந்தேக நபர் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அம்மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles