அமெரிக்காவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் FBI அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவைச் சேர்ந்த 34 வயதான வன்யிங் Z என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சீனாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறவிருந்தபோது லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் சியாட்டிலுக்குப் பயணம் செய்த அந்தப் பெண், தைவான் அரசாங்கத்தின் உயர் பதவியில் உள்ள அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினரைக் கண்காணித்தார் எனக் கூறப்படுகிறது.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் வாகனப் பதிவு எண் தகவல்களை அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும், புலனாய்வாளர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உளவு முறைகளைப் பயன்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அந்தப் பெண், லொஸ் ஏஞ்சல்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.
