அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாதமை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுவொரு சங்கடமான மற்றும் அவமானகரமான முடிவு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியான நவநீதம் பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்த கருத்து வந்துள்ளது.
நவநீதம் பிள்ளையை விமர்சித்த அவர், அவர் ஒரு மர்மமான நபர் என்றும், நான் அவர் பற்றி கேள்விப்பட்டதில்லை, ஒருவரும் கேள்விப்பட்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாம் பல போர்களை தீர்த்துவைத்துள்ளதாக பட்டியலிட்டதுடன், இந்தியா – பாகிஸ்தான், வட மற்றும் தென் கொரியா, ஜப்பான் மற்றும் வட கொரியா, சீனா மற்றும் தைவான் ஆகியவற்றுக்கு இடையே போர்கள் வெடிப்பதைத் தடுக்க உதவினார் எனவும் கூறியுள்ளார்.
“நான் தீர்த்து வைத்த ஒவ்வொரு போருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை எட்டு முறை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பரிசை நோர்வே எனக்கு வழங்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
