பனாமாவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

பனாமாவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று பதிவாகியுள்ளது.

இதன் மையம் தென்-மத்திய பனாமாவில் உள்ள பிடலோசா அரிபா (Pitaloza Arriba) நகரத்திலிருந்து சுமார் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் அமைந்திருந்தது.

இதனால் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், பரவலான அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, சுமார் 46 லட்சம் மக்கள் மிதமான முதல் தீவிரமான அதிர்வுகளை உணர்ந்துள்ளனர்.

மேலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் “பரவலாக இருக்கக்கூடும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 200 கி.மீ தொலைவில் வசித்துவந்த பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ஆரம்பத்தில் பனாமாவைச் சுற்றியுள்ள 11 நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன; எனினும், பின்னர் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதை அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles