சீரற்ற வானிலையால் 5,747 பேர் பாதிப்பு – 08 பேர் உயிரிழப்பு

இலங்கை முழுவதும் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மோசமான வானிலை நிலைமைகள் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் (DSDs) 1,594 குடும்பங்களைப் பாதித்துள்ளன.

அதேநேரம் மோசமான வானிலை காரணமாக எட்டு பேர் உயிரிழந்தனர் எனவும், ஒருவர் காணாமல் போயுள்ளார் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான அனர்த்தங்களால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

அதேவேளையில், 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சி நிலைமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 பிரிவுகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.

இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 128,977 பேருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles