கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், டெல்லி பகுதிக்கு வடக்கே பிரான்ட்ஃபோர்ட் சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒன்ராறியோ மாகாணக் காவல் துறையினர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு முன்னர் கார் மற்றும் பெரிய லொறி இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த ஓட்டுநர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை அதிகாரி எட் சஞ்சுக் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த பிரான்ட்ஃபோர்ட் சாலையில், வின்ஹாம் சென்டர் ரோடு மற்றும் வின்ஹாம் ரோடு 7 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதி சுமார் 6 முதல் 8 மணி நேரத்திற்கு மூடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் அல்லது விபத்தை நேரடியாக கண்டவர்கள் உள்ளூர் நார்போக் கவுண்டி காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
