உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து, முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு தொடர்பான இடைமனுக்கள் மீதான தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இன்று (14) அறிவிக்கப்படவிருந்த குறித்த தீர்ப்பு, எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்ற அமர்வு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்துள்ளது.
இந்த வழக்கில் கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி வெங்கமுவே நாலக தேரர், கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்டோர் மற்றும் பல சிவில் சமூக அமைப்புகள் இடைமனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
