தமிழ்நாடு நீச்சல் போட்டியில் தங்கம் வென்று ஈழத்துச் சகோதரிகள் சாதனை!

தமிழ்நாட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரி மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான நீச்சல் போட்டியில் அபார திறமையை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தையும் பதக்கங்களையும் வென்று ஈழத்துச் சகோதரிகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் இம்மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவிகளுக்கான பிரிவில் பங்கேற்ற தனுஜா சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி முதலிடம் பிடித்தார்.

அதேவேளை, பாடசாலை மாணவிகளுக்கான பிரிவில் பங்கேற்ற டிலாஜினி, மூன்று போட்டிகளில் முதலிடத்தைப் பெற்று 3 தங்கப் பதக்கங்களையும், இரண்டு போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்று 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்துவரும், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் – அருள்ஜோதி தம்பதியரின் புதல்விகளான தனுஜா மற்றும் டிலாஜினி ஆகியோர், நீண்டகாலமாகவே இந்தியளவில் நடைபெறும் பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுத் தமது அபார திறமைகளை வெளிப்படுத்தித் தொடர்ச்சியாகச் சாதனைகளைப் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles