முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளமாக 5,150,626 ரூபாய் பெற்றுள்ளார் என கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த தொகையில் கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என்றும் அந்தச் சாட்சி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
