ஐந்து நாள் பயணமாக சுவீடன் செல்கிறார் சிங்கப்பூர் அதிபர் தர்மன்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சுவீடனுக்குச் செல்கிறார்

அங்கு அந்நாட்டின் அரசியல், வர்த்தகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஒக்டோபர் 17 முதல் 21 வரை சுவீடனில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சிங்கப்பூர் அதிபர் ஒருவர், சுவீடனுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது பயணம் அமைகிறது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள அரண்மனையில் அதிபர் தர்மனுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என்றும் சுவீடன் மன்னர் கார்ல் 16ஆம் கஸ்டாஃப்பும் அவரது அவரது துணைவியார் ராணி சில்வியாவும் அவருக்கு அரசு விருந்து அளிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லென், பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அதிபர் தர்மன் சந்திக்கிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles