செம்மணி புதைகுழி பற்றிய முக்கிய அறிக்கை திங்களன்று நீதிமன்றில் தாக்கல்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான தொல்லியல் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் செம்மணி அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அகழப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட 540 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பிலான தொல்லியல் ஆய்வை பேராசிரியர் ராஜ் சோமதேவா மேற்கொண்டிருந்தார்.

இந்த ஆய்வின் அறிக்கையே பேராசிரியரால் வரும் திங்கட்கிழமை 19ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

இந்த அறிக்கையில் குறித்த உடல்களின் இறப்புக்கான காரணம் மற்றும் இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கக்கூடிய கால அடிப்படை போன்றவை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் செம்மணி தொடர்பான 19ஆம் திகதிய வழக்குத் தவணை பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles