ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுவிப்பு

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான சிரந்தி ராஜபக்சவைப் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதன்படி, சந்தேகநபரை 1 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்த நீதவான், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிவெம்பர் மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபா பணம் சட்டவிரோதமான முறையில் ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் சிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles