ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ரொட்டி, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
