சூடானில் இராணுவத்தினர் நடத்திய டிரோன் தாக்குதல்களில் 300 இற்கும் மேற்பட்டோர் பலி

சூடான் இராணுவம் நடத்தியதாகக் கருதப்படும் அடுத்தடுத்த ட்ரோன் (Drone) தாக்குதல்களில், துக்க வீட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் சந்தையில் இருந்த பொதுமக்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சூடான் இராணுவத்திற்கும், ‘விரைவு ஆதரவுப் படை’ (RSF) என்ற துணை இராணுவப் படைக்கும் இடையே தீவிரமடைந்துள்ள உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாகவே இந்த விபரீதத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

மேற்கு கோர்டோஃபான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களில் மட்டும் 150 பேர் உயிரிழந்தனர் என ‘சூடான் போர் கண்காணிப்பகம்’ தெரிவித்துள்ளது.

தெற்கு கோர்டோஃபானில் உள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான கடுக்லியிலிருந்து இந்த டிரோன்கள் ஏவப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக சுமார் 200 பேருடன் பயணித்த லொறி ஒன்று அல்-தபாப் (Al-Dabab) நகரை வந்தடைந்தபோது, அதன் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் லொறியில் பயணித்த 145 பேரும், அஞ்சலிக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது விழுந்த குண்டில் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதே தினத்தன்று மாலையில், அல்-முஜ்லாத் (Al-Mujlad) நகரில் உள்ள சந்தை ஒன்றின் மீதும் ராணுவத்தின் டிரோன்கள் குண்டுவீச்சு நடத்தின.

இதனிடையே, சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க சர்ச்சைக்குரிய பகுதியான ‘அபியே’ நகரின் அமியத் சந்தையைக் குறிவைத்துத் திங்கட்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது.

ஆர்.எஸ்.எஃப் (RSF) படையினருக்கான எரிபொருள் விநியோக மையமாக இந்தச் சந்தை செயல்பட்டதால் இத்தாக்குதலை நடத்தியதாக இராணுவத் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles