திலீபனின் சிலை விவகாரம்: அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் வாக்குமூலம்

யாழ். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“சிலை நிறுவுவதற்கான நிதியுதவி, நிர்மாணப் பணிகள், அதனைப் பிரபலப்படுத்துதல் மற்றும் சிலை திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தல் ஆகிய நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் சிலையைப் பொலிஸார் பொறுப்பேற்று, வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி யாழ். நல்லூரில் திலீபன் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் நிறுவப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இதற்கு முன்னர் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் உரிய நீதிமன்றத்தில் விடயங்களைச் சமர்ப்பித்திருந்தனர் என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பதை இலங்கைச் சட்டம் கடுமையாகத் தடை செய்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles