பிரிட்டிஷ் கொலம்பியாவின் என்.டி.பி தலைவர் பதவி விலகினார்

இடைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து, கனடா பிரிட்டிஷ் கொலம்பியா புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து டேவிட் ஈபி சனிக்கிழமை விலகியுள்ளார்.

“மிகவும் கனத்த இதயத்துடனேயே நான் இந்த முடிவை எடுக்கின்றேன். எனினும், நமது கட்சிக்கு புதிய தலைமைத்துவத்திற்கான நேரம் இதுவே” என்று ஈபி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிதாகப் முதல்வராகத் தேர்வாகியுள்ள லோர்ன் டோர்க்சனுக்கு தனது நல்வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இத்தேர்தலில் பி.சி. கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த பத்தாண்டுகளில் முதன்முறையாக என்.டி.பி கட்சி எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

“நாங்கள் யாரும் எதிர்பார்த்த முடிவு இதுவல்ல. தனது மக்களுக்காகக் கடுமையாக உழைத்த எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இது எனது இதயத்தை உடைக்கிறது, இந்த முடிவிற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்” என்று ஈபி உருக்கமாகத் தெரிவித்தார்.

ஈபி தனது சொந்தத் தொகுதியான ‘வான்கூவர் பொயிண்ட் கிரே’ தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டுத் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டு முதல் என்.டி.பி கட்சி செய்த பணிகளைப் பற்றிப் பெருமிதம் கொள்வதாகவும், முதல்வராக பணியாற்றியது தனது வாழ்நாளின் பெருமை என்றும் கூறிய அவர், இனிவரும் நாட்களில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்தார் இத்தேர்தல் தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஸ்டூவர்ட் பிரெஸ்ட், “இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக் காலம் இருந்த நிலையில், இந்த அவசரத் தேர்தல் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இந்தத் தவறான முடிவினால் கட்சி இரண்டு ஆண்டு கால ஆட்சியை இழந்துள்ளதற்கு ஈபியே முழுப் பொறுப்பாவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles