சீனாவில் அமோக விற்பனையாகும் விநோத பலகாரம்!

சீனாவில் பார்ப்பதற்கு அச்சு அசலாக ராட்சத கரப்பான் பூச்சி அமர்ந்திருப்பது போன்ற தோற்றமளிக்கும் “வோட்டர் ரோச் எக் டார்ட்ஸ்” (Water Roach Egg Tarts) என்ற விநோதமான பலகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரில் உள்ள பிரபல உணவகம் ஒன்றிலேயே இந்த விநோத உணவு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பார்ப்பதற்கு அருவருப்பாகவும் அச்சுறுத்தும் கரப்பான் பூச்சிகள் போலவும் காட்சியளித்தாலும், அவை உண்மையில் கரப்பான் பூச்சிகள் அல்ல என்றும், “டைவிங் பீட்டில்ஸ்” (Diving Beetles) எனப்படும் நீர் வண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பாரம்பரிய மருத்துவத்தில் இந்த நீர் வண்டுகள் உடலின் இரத்த
ஓட்டத்தை சீராக்கவும், சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பலகாரத்தின் தயாரிப்பு குறித்து உணவக உரிமையாளர் தெரிவிக்கையில், இந்த வண்டுகளின் துர்நாற்றம் முழுமையாக நீக்கப்பட்ட பின்னர், அவற்றின் இறக்கைகள் உடையாத வகையில் எண்ணெயில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்கப்படுகின்றன.

தொடர்ந்து, இனிப்பான முட்டை பலகாரத்தின் மீது இந்த உப்புத்தன்மை கொண்ட வண்டுகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

சமூக வலைதளங்களில் இதன் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தபோதிலும், இந்த வினோத உணவை ருசிப்பதற்காகவே அண்மை நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தினசரி குறித்த உணவகத்திற்குப் படையெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles