தில்லியில் இந்தியா கூட்டணி பேரணி : ஏராளமான தொண்டர்கள் பங்கேற்பு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்தியா கூட்டணி பேரணியை ஞாயிற்றுக்கிழமை (நவ.1) தொடங்கியது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையைக் கண்டித்தும் டில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இண்டியா கூட்டணியின் பேரணியை முன்னிட்டு, இன்று மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேரணிக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலேயே டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் திரளத் தொடங்கினர். தலைநகரின் பிற பகுதிகளிலும் கட்சிகளின் தொண்டர்கள் ஒன்று கூடினர்.

சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் இல்லத்திற்கு வெளியே கூடினர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் இமாச்சல பவனுக்கு வெளியே ஒன்றுகூடி, அங்கிருந்து பேரணி நடைபெறும் இடத்திற்குப் புறப்பட்டனர். இந்த போராட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் கட்சித் தொண்டர்களை அந்தந்த கட்சிகள் திரட்டி வந்துள்ளன.

பேரணியானது நண்பகல் 12 மணியளவில் டில்லியில் மிண்டோ சாலை – கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி ராம்லீலா திடலை அடைகிறது. பின்னர் அங்கு மாலை 5 மணி வரை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அங்கு, இந்தியா கூட்டணியைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்தப் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆகையால், தில்லியில் 13,000 இற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்தியா கூட்டணி நேற்று (அக். 31) நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles