நுவரெலியாவில் குளிரைப் போக்க BBQ அடுப்பை பயன்படுத்திய தம்பதியர் பலி!

நுவரெலியா, மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து உயிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், நுவரெலியா மீப்பிலிமன பகுதியில் சுற்றுலா விடுதியொன்றின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் காரணமாக, தம்பதியினர் தங்கியிருந்த அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்ட நிலையில் உறங்கச் சென்றுள்ளனர். இதன்போது அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மொனாக்சைட் வாயுவைச் சுவாசித்ததால் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோதும் இருவரும் பதிலளிக்காததால், கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம சேவகர், இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து நானுஓயா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

உயிரிழந்த ஆண் 52 வயதுடையவர் எனவும், அவர் கப்பல் ஒன்றின் தலைவராகப் பணியாற்றியவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவிக்கு 46 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குளிரான பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் BBQ அடுப்புகளை மூடிய அறைகளுக்குள் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

BBQ அடுப்புகளில் நிலக்கரி அல்லது எரிபொருள் முழுமையாக எரியாதபோது நிறமற்றதும் மணமற்றதுமான கார்பன் மொனாக்சைடு வாயு வெளியேறக்கூடும். இந்த வாயுவைச் சுவாசிப்பது உயிருக்கு ஆபத்தானது எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles