உக்ரைனின் தெற்கு சபோரிஜியா மாகாணம் கொம்ஷவவாக் கிராமத்தில் நிவாரண பொருட்கள் விநியோக மையம் மீது ரஷ்யா நேற்று(02) ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த ஏவுகணை தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன், ரஷ்யா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
