மாலைதீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் (64), சிறுமிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 2) இரவு கைது செய்யப்பட்டார்.
மாலைதீவு காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் திங்கள்கிழமை (நவம்பர் 2) இரவு கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுகளை அப்துல்லா ஷாஹித் மறுத்துள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்ற உத்தரவின் பேரில், நேற்று இரவு 10 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார்.
2021-22 காலகட்டத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவராகப் பணியாற்றிய அப்துல்லா ஷாஹித், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாலத்தீவு அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கிய நபர்களில் ஒருவராக உள்ளார். எனவே, அவரது கைது நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
சமீபத்தில் புது டெல்லிக்குச் வந்திருந்த அப்துல்லா ஷாஹித், ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், மாலைதீவு அதிபர் முகமது முய்சு பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட பயணத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அதிபர் முய்சு மாலத்தீவை இந்தியாவுக்கு எதிரான பாதையில் கொண்டு செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
