பிணை கிடைத்தும் சிறையிலேயே நாமல் – எயார்பஸ் ஊழல் வழக்கால் தொடரும் விளக்கமறியல்

கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் – வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், வேறொரு வழக்கில் பிணை பெறாத காரணத்தால் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை, ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள காணியைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காகக் கிரிஷ் நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு வசதியாக 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றஞ்சாட்டப்பட்டு இந்த வழக்கு இடம்பெற்று வருகின்றது.

இந்த வழக்கில் அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையிலேயே அவருக்குப் பிணை அனுமதிக்கப்பட்டது.

இதேவேளை, எயார்பஸ் விமான ஒப்பந்த வழக்கில் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை கிடைக்காத காரணத்தினாலேயே, நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles