போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமானப் பணி; மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசின் உயரிய விருது

ரஷ்யா – உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், குடும்பங்களைப் பிரிந்த உக்ரைனியக் குழந்தைகளுக்கும் உதவுவதில் ஆற்றிய மனிதாபிமானப் பங்களிப்பைப் பாராட்டி, அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு தனது உயரிய அரச விருதுகளில் ஒன்றை வழங்கிக் கௌரவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, மெலனியா ட்ரம்புக்கு ‘Order of Princess Olga, First Class’ என்ற விருதை வழங்குவதற்கான ஆணையை நவம்பர் 2ஆம் திகதி பிறப்பித்தார். குறித்த அறிவிப்பு நவம்பர் 4ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்துச் செல்லப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் முயற்சிகளிலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் மெலனியா ட்ரம்ப் பங்களித்துள்ளார் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி (Oleshky) பகுதியில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்த முயற்சியில் அவர் முக்கியப் பங்காற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி ஆரம்பமான ஆறு நாள் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் ஊடாக, உணவு, மருந்து மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டிருந்த பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாராட்டியே மெலனியா ட்ரம்புக்கு உக்ரைனின் ‘Order of Princess Olga, First Class’ விருது வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles