பேராதனை போதனா வைத்தியசாலையில் நிலவும் நெருக்கடியை நிவர்த்திக்கும் கம்மெத்த

Colombo (News 1st) பேராதனை போதனா வைத்தியசாலையில் நிலவும் நெருக்கடியை நிவர்த்திப்பதற்கு கம்மெத்த இன்று(03) தயாராகியுள்ளது.

பேராதனை பல்கலைக்கழக பல் போதனா வைத்தியசாலையின் வாய், தாடை சத்திரசிகிச்சை திணைக்களம் கண்டி மற்றும் அதனை சூழவுள்ள மக்களுக்காக சேவையாற்றும் ஒரு நிறுவனமாகும்.

எனினும் பல வருடங்களாக வைத்தியப் பிரிவின் மேற்கூரை, படுக்கைகள் மற்றும் வைத்தியர்களின் ஓய்வறைகள் என்பன  சேதமடைந்து காணப்படுகின்றன.

இதனை சீரமைத்து புதிய சில மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு கம்மெத்தவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், அதற்கான செயற்பாடுகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

வைத்தியப் பிரிவின் செயற்பாடுகளை மீளவும் சிறப்பாக நடத்துவதற்கான சூழலை கம்மெத்த இன்று(03) ஏற்படுத்தவுள்ளது.

இந்த கைங்கரியத்தில் Next Manufacturing நிறுவனம் கம்மெத்தவுடன் கைகோர்த்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles