உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம்

Colombo (News 1st) உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் இன்று முதல் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு  இன்று பகல் கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத் இலங்கசிங்க குறிப்பிட்டார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு மாதங்களுக்கு மேலாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles