பசளை கொள்வனவிற்கான வவுச்சர்களை விநியோகிக்க ஜனாதிபதி அனுமதி

Colombo (News 1st) சிறுபோக நெற்செய்கைக்கு பசளை கொள்வனவிற்கான வவுச்சர்களை விநியோகிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த யோசனைக்கு நிதிக்குழுவின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விவசாய அமைச்சில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே விவசாய அமைச்சர் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறுபோகத்தில் எவ்வித இடையூறுமின்றி அரச மற்றும் தனியார் துறையினரிடமிருந்து விவசாயிகள் பசளையை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, உரத்தின் தரம் தொடர்பில் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த பெரும்போகம் முதல் உர விநியோக செயற்பாட்டிலிருந்து அரசாங்கம் விலகவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்தார்.

உர விநியோக செயற்பாட்டை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles