மன்னாரில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Colombo (News 1st) மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 16 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், 21 வயதான மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 33 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரை சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து 21 வயதாக நபர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

16 வயது சிறுவனை தெல்லிப்பளை சிறுவர் நன்னடத்தை மையத்தில் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles