ஆற்றின் வழியே கட்டிலில் வைத்து சுமந்து சென்றபோதே குழந்தை பிரசவித்த கர்ப்பவதி

அம்​புலன்​ஸ், பாலம் வசதி இல்​லாத​தால் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கிராம மக்​கள் கட்​டிலில் சுமந்து சென்ற ​போது வழி​யிலேயே குழந்தை பிறந்​துள்​ளது.

இந்தியாவின் மத்​திய பிரதேசத்​தின் சிந்த்​வாரா மாவட்​டம், ஹதோடா ஹிரி கிராமத்​துக்கு செல்ல முறை​யான சாலை வசதி இல்​லை. அங்கு வசிக்​கும் சுமார் 20 குடும்​பங்​கள், மழைக்​காலத்​தில் ஆற்​றில் ஏற்படும் வெள்​ளம் காரண​மாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்​கப்​படு​கின்​றனர். அந்த கிராமத்​தைச் சேர்ந்த சவிதா விஸ்​வ கர்​மாவுக்கு (வயது 35) கடந்த புதன் ​கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்​ளது.

உறவினர்​கள் 108 அம்​புலன்ஸை அழைத்​துள்​ளனர். ஆனால் ஆற்றில் வெள்​ளம் ஓடிய​தால் அம்​புலன்​ஸால் வர முடிய​வில்​லை. வேறு வழி​யின்​றி, கிராம மக்​கள் அவரை கட்​டிலில் படுக்க வைத்து, தோளில் சுமந்​த​படி ஆற்​றைக் கடக்க முயன்​றனர். அப்போது வலி தீவிரமடைந்து வழி​யிலேயே சவிதா குழந்தையைப் பெற்​றெடுத்​தார். இது தொடர்​பான வீடியோ வைரலாகி வரு​கிறது.

அதன் பின்​னர், தாயை​யும் குழந்​தையை​யும் பத்​திர​மாக ஆற்​றின் மறு​பக்​கத்​துக்​குக் கொண்டு வந்த கிராம மக்​கள், அம்புலன்ஸுக்காக நீண்ட நேரம் காத்​திருந்​தனர். அப்​போதும் அம்​புலன்ஸ் வராத​தால், இரு​வரை​யும் ஒரு மோட்​டார் சைக்​கிளில் அமர​வைத்து அமர்​வாடா அரசு மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர். தற்​போது தாயும் சேயும் நலமாக இருப்​ப​தாக மருத்துவ​மனை நிர்​வாகம் தெரி​வித்​துள்​ளது.

ஒவ்​வொரு மழைக் ​காலத்​தி​லும் தங்​கள் கிராமம் துண்டிக்கப்படுவ​தாக​வும், பாலம் மற்​றும் சாலை வசதி கேட்டு அதி​காரி​கள் மற்றும் மக்​கள் பிர​தி​நி​தி​களிடம் பலமுறை மனு அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும்எடுக்​கப்​பட​வில்லை என்​றும் கிராம மக்​கள் வேதனை​யுடன் தெரி​வித்​துள்​ளனர். இச்​சம்​பவம் அம்​மாநிலத்​தின் கிராமப்​புற மருத்​து​வக் கட்​டமைப்​பின் அவல நிலையை மீண்​டும் வெளிச்​சம்​ போட்​டுக்​ காட்​டி​யுள்​ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles