பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடம் தொடர்பில் ஜனாதிபதி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இடையே இன்று(09) கலந்துரையாடல்

Colombo (News 1st) வெற்றிடமாகியுள்ள பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில் இன்று(09) தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி முதல் இன்று வரை, சுமார் 14 நாட்களாக பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது.

பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய C.D.விக்ரமரத்ன கடந்த 26ஆம் திகதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்த பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வெற்றிடமாகிவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பரிசீலிக்கப்பட வேண்டிய எந்தவொரு பரிந்துரையையும் அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles